Tamilnadu
சென்னைக்கு படையெடுத்த 7,400 பேர்.. ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு E-Pass - காற்றில் பறக்கும் கொரோனா!
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி மாவட்டம் விட்டு மற்றொரு மாவட்டத்துக்கோ, மாநிலம் விட்டு மாநிலத்துக்கோ செல்ல வேண்டுமென்றால் இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது.
இதனை கடந்த மாத இறுதியில் மத்திய அரசு ரத்து செய்தது. இருப்பினும், தமிழகத்தில் இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது. திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் அளிக்கப்பட்டு வந்தது. மற்ற காரணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தாலும் கிடைக்காததால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
இ-பாஸ் வழங்குவதற்கு இடைத்தரகர்கள் மூலம் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதும் அதிகரித்தது. இதனால் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய கோரிக்கை வலுத்தது. இந்நிலையில், தமிழகத்திற்குள் பயணிக்க ஆதார் அல்லது ரேஷன் அட்டை விவரங்களுடன் செல்போன் எண்ணை இணைத்து விண்ணப்பித்தால் எந்தவித தாமதமும் இன்றி உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி இ-பாஸ் நடைமுறை தளர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு சென்ற பலர் வேலைக்கு மீண்டும் சென்னை திரும்ப தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு ஒரே நாளில் 7 ஆயிரத்து 400 பேர் வந்துள்ளனர்.
இ-பாஸ் தாமதம் இன்றி உடனே கிடைப்பதால் வெளியூர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும் வாகனங்கள் படையெடுக்கின்றன. இதனால் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!