Tamilnadu
“உச்சத்தை எட்டும் கோஷ்டி பூசல் - அ.தி.மு.க-வில் மீண்டும் பிளவு” : EPS - OPS பனிப்போருக்கு என்ன காரணம்?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஆளும் அ.தி.மு.க-வில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டு, கட்சிக் குழப்பங்களோடு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகவும் ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராகவும் பதவி வகித்து வந்தாலும் அவர்களிடையே மறைமுகமான ஒரு பனிப்போர் தொடர்ந்து இருந்து வருவதாக அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் யாரை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுப்பது என்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்வார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்தார். இதையடுத்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து அ.தி.மு.கவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து பல்வேறு அமைச்சர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வந்த நிலையில், தேனி மாவட்டத்தில் தமிழகத்தில் நிரந்தர முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பைக் கிளப்பின.
அ.தி.மு.கவில் அடுத்த தலைமை யார் என்ற பிரச்னை சூடு பிடித்துள்ள நிலையில், தற்போது இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது அ.தி.மு.க-வினரிடையே மிகப் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் ஒன்றுகூடி ஆலோசனை மேற்கொண்டனர்.
அந்த ஆலோசனைக்கு பிறகு கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்ட அமைச்சர்கள் அவரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனையடுத்து, மூத்த அமைச்சர்கள் முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் துணை முதல்வர் உடன்படவில்லை என்றும், ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அதிகாரப்போட்டியால் அ.தி.மு.கவில் தற்போது பிளவு தற்போது அதிகரிக்கத் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதனால் பொதுமக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடையே அ.தி.மு.க-வில் மீண்டும் பிளவு உருவாகியுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. மேலும், அ.தி.மு.கவில் இருந்து ஒருபகுதியினர் வெளியேறி தற்போது உள்ள தலைமைக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்குவார்கள் என்றும் இன்னும் சிலர் மாற்றுக் கட்சிகளில் இணைவார்கள் என்றும் பல்வேறு கருத்துகள் வலம்வரத் துவங்கியுள்ளன.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!