Tamilnadu
தேசிய கொடிக்கு அவமரியாதை : இந்த முறையும் எஸ்.வி சேகரை கைது செய்யாமல் கோட்டை விடுமா தமிழக போலிஸ் ?
தமிழகத்தில் ஆட்சி செய்யும் அ.தி.மு.க அரசு, பா.ஜ.கவின் மீதுள்ள விசுவாசத்தால் தங்களை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்ற நினைப்பில் தமிழக பா.ஜ.கவினர் பலர் அவதூறு கருத்துகளையும் வன்மத்தையும் பேசி வருகின்றனர்.
அதிலும், குறிப்பாக கடந்த காலங்களில், “சுவாதி படுகொலையில் முஸ்லிம்கள் மீது அவதூறு பேசி சட்டம் - ஒழுங்கு கெடுவது போல கருத்துச் சொன்ன ஒய்.ஜி.மகேந்திரன் இதுவரை கைது செய்யப்படவில்லை.
தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் இ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் ஆண்மையற்றவர்கள் என்று சொன்ன ‘துக்ளக்’ குருமூர்த்தி கைது செய்யப்படவில்லை. காவல்துறையினரிடமே ‘ஐகோர்ட்’ குறித்து கீழ்த்தரமான வகையில் பேசிய எச்.ராஜா கைது செய்யப்படவில்லை.
பெண் பத்திரிகையாளர்களை கீழ்த்தரமாகவும், அவதூறாகவும் பேசிய எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை. பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற சனாதனமுறையை நியாயப்படுத்தியும், நாயையும் மனிதர்களையும் இணைத்து சாதி வெறியோடு கருத்துச் சொன்ன வெங்கடகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்படவில்லை.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த தீட்சிதர் தர்ஷன் இதுவரை கைது செய்யப்படவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை ‘செருப்பால் அடிக்கவேண்டும்’ என்று வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிய நடிகை காயத்ரி ரகுராம் கைது செய்யப்படவில்லை.
மாணவர்கள் மீது குண்டு வீசுவோம் என வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய எச்.ராஜா கைது செய்யப்படவில்லை. இவர்கள் அனைவரும் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் தொடர்பில் உள்ளவர்கள். இவர்களில் ஒருவரைக் கூட கைது செய்யமுடியவில்லை.
இந்நிலையில், தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் அ.தி.மு.க-விற்கு அட்வைஸ் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர் களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்டு 15-ம் தேதி ஏற்றப்போகிறாரா?; தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா” எனக் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் நேற்று நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார் கூறி, சென்னை போலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த மனுவில், “நடிகர் எஸ்.வி.சேகர், யூடியூப் சேனல் ஒன்றில் இந்திய தேசியக்கொடியை அவமதித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் என்றும், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாகவே முதல்வரை விமர்சித்து பேசிய நடிகர் எஸ்.வி.சேகர் இந்த முறையாவது கைது செய்யப்படுவாரா என அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !