Tamilnadu
“மருத்துவர்களிடம் கொத்தடிமைத்தனத்தை பின்பற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர்” : கொந்தளிக்கும் ஊழியர்கள் !
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவால் அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை ஊழியர்கள் கடும் முயற்சியெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முன்னிலையில் இருந்து போராடும் மருத்துவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களே பலர் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதில், கொரோனா சிகிச்சை அளித்த மருத்துவர்களில் நாடுமுழுவதும் சுமார் 175 மருத்துவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் முன்களப் பணியாளர்களின் இறப்புக்கு வழங்கப்படும் குடும்ப இழப்பீடு நிதியை ரூ. 50 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமாக தமிழக அரசு குறைத்துள்ளது. இது மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஆய்வு செய்யும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை டீன் ஆகியோருக்கு மரியாதைக் கொடுக்காமல் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
இதனிடையே, சமூக வலைதளங்களில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் மருத்துவத் துறை ஊழியர்கள் கைகட்டு குணிந்து பேசுவது போன்ற புகைப்படம் ஒன்றும், மற்றொரு புகைப்படத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் இருக்கையில் அமைந்துகொண்டு மருத்துவகல்லூரி முதல்வரை நிற்க வைத்து தடுப்பு நடவடிக்கையை கேட்டறிகிறார்.
இந்த இரண்டு புகைப்படமும் தற்போது பெரும் அதிர்ச்சியை கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள முகநூல் பதில், “மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் எல்லாம் உட்கார்ந்து இருக்கிறார்கள்.
மருத்துவக் கல்லூரி முதல்வரை ஓரமாக நிற்க வைத்து பேசி கொண்டு இருக்கிறார்கள். ஒரு மெடிக்கல் காலேஜ் டீன் எந்த விதத்தில குறைந்து போனார் ?, என்ன விதமான மனநிலை இது?இவ்வாறு அவமானப் படுத்தலாமா?.
இதில் ஒரு கசப்பான உண்மை என்னவென்றால், அங்கு அமர்ந்து இருப்பவர்கள் எல்லோரையும் விட, நிற்கிற அந்த டீனுக்கு தான், இந்த கொரோனாவை பற்றி கூடுதலாகத் தெரியும். மருத்துவர்களை மதிக்காத ஒரு சுகாதாரத்துறை அமைச்சர். மருத்துவர்கள் என்ன கல் குவாரியில் வேலை செய்யும் கொத்தடிமைகளா? அல்லது பண்ணையார்களிடம் வேலை செய்யும் பண்ணையடிமைகளா? கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்ட சமூகம் இது.
கம்யூனிஸ்ட்களால், பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்ட மண் தஞ்சை மண். மீண்டும் கொத்தடிமை முறையை திணிக்க முயல வேண்டாம், மாண்புமிகு அமைச்சர் அவர்களே!” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் சுகாதாரத்துறை ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!