Tamilnadu
தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை? அடுத்த 2 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி காரணமாக உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதியில் நிலவும் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை , நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவலளித்துள்ளது.
மேலும், வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல, அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்தில் உள் தமிழகம் , மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் .
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும்
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழை அளவு
பாம்பன் (ராமநாதபுரம் ) 12, தேவலா (நீலகிரி ) 10, சின்னக்கல்லார் (கோவை ) 9, செய்யூர் (செங்கல்பட்டு), செந்துறை ( அரியலூர் ), ஆடுதுறை (தஞ்சாவூர்) , சேந்தமங்கலம் (நாமக்கல் ), மதுராந்தகம் (செங்கல்பட்டு), நடுவட்டம் (நீலகிரி ) தலா 7 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும், ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே அடுத்த 24 மணி நேரத்திற்கு இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
கேரளா- கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சதீவு, பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!