Tamilnadu
ஒரே நாளில் 119 பேர் பலி : கொரோனா ஹாட்ஸ்பாட் ஆகும் மாவட்டங்கள் - தொடர்ந்து மெத்தனம் காட்டும் அதிமுக அரசு!
தமிழகத்தில் புதிதாக 65 ஆயிரத்து 189 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 5,880 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திலேயே இருந்தவர்கள் 5,856 பேருக்கும், வெளிநாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த 24 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக சென்னையில் 984 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1000க்கும் குறைவாக இன்று பதிவாகியுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உச்சகட்ட பாதிப்பு எண்ணிக்கையே அண்மைக்காலங்களாக பதிவாகி வருகிறது.
அதன்படி சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 388, தேனியில் 351, செங்கல்பட்டில் 319, ராணிப்பேட்டையில் 253, திருவண்ணாமலையில் 248, கோவையில் 228, தஞ்சாவூரில் 217, கடலூரில் 211, திருநெல்வேலியில் 22 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகையால் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.85 லட்சத்து 24 ஆக அதிகரித்துள்ளது. அதில், 2.27லட்சத்து 575 பேர் இதுவரையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். இன்று மட்டுமே 6,488 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், தினந்தோறும் கொரோனா தாக்கத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. அதன்படி இன்று இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 119 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதன் மூலம் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளது.
ஆகவே தற்போது 52 ஆயிரத்து 759 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மாநிலத்தில் 29 லட்சத்து 75 ஆயிரத்து 657 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?