Tamilnadu
சென்னையில் பாதுகாப்பில்லாத நிலையில் அம்மோனியம் நைட்ரேட் : பொய் சொல்கிறதா சுங்கத்துறை? - உண்மை என்ன?
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப்பகுதியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருக்குலைய செய்துள்ளது.
இந்த மாபெரும் வெடிப்பு சம்பவத்தால் துறைமுகப்பகுதியைச் சுற்றியுள்ள 30 கி.மீ தொலைவுக்கு தீ விபத்தின் தாக்கம் உணரப்பட்டது. இந்த விபத்தால் 5,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் 130 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அந்நாட்டின் துறைமுகப் பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 750 ரன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருள்களில் ஏற்பட்ட தீ விபத்தே இத்தகைய கொடூர சம்பவத்திற்குக் காரணம் என அந்நாடு அதிபர் லெபனான் பிரதமர் ஹசன் தியாப் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பல உலக நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டிருக்கும் அம்மோனியம் நைட்ரேட் குறித்தும், அதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பேசத் துவங்கின.
அந்த வகையில், தமிழகத்தின் வட சென்னை துறைமுகத்தில் 2015-ம் ஆண்டு கண்டெய்னர் மூலமாக சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு 5 ஆண்டுகளாக சேமிப்பு கிடங்கில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது.
இதனையடுத்து அம்மோனியம் நைட்ரேட் உள்ள கிடங்கின் பாதுகாப்பு நடவடிக்கை அப்பகுதி மக்களும், சூழலியாளர்களும் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து மணலியில் உள்ள வேதிப் பொருள் பாதுகாப்பு கிடங்கில் வெடிபொருள் துறை துணை கட்டுப்பாட்டாளர் சுந்தரேசன் ஆய்வு செய்தார்.
சென்னை மணலியில் உள்ள சத்துவா கண்டெய்னர் முனையத்தில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் 37 கண்டெய்னர்களில் வைக்கப்பட்டிருப்பதை வெடிபொருள் துறை துணை கட்டுப்பாட்டாளர் சுந்தரேசன் ஆய்வு செய்தார்.
அவருடன் சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினரும் ஆய்வு செய்தனர். அதன் பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு செய்தபின், செய்தியாளர்களிடம் பேசிய சுந்தரேசன், அம்மோனியம் நைட்ரேட் உள்ள கண்டெய்னர்கள் பாதுகாப்பாக இருப்பதாவும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும், விரைவில் அவை அப்புறப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு தெரிவித்த தகவலின் படி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி தலைமையில் 3 அதிகாரிகள் மற்றும் தீயணைப்புறை இயக்குனர், துணை இயக்குனர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஆகியோர் கொண்ட குழு நேரில் ஆய்வு செய்து அரசிற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருக்கு கிடங்கில் பல ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டும் கண்டெய்னர்கள் உள்ளது. இந்த கிடங்கு இருக்கும் 700 மீட்டர் தூரத்தில் 7,000 பேர் வாழ்ந்துவரும் மணலி பகுதியும், 5,000 பேர் வாழ்ந்துவரும் சடையான்குப்பம் பகுதியும் உள்ளது.
சுமார் 12 ஆயிரம் பேர் கிடங்கு இருக்கும் பகுதியின் அருகில் வசிக்கும் நிலையில், அம்மோனியம் நைட்ரேட் கிடங்கு இருக்கும் பகுதியிலிருந்து 2 கி.மீ சுற்றளவில் குடியிருப்புகள் இல்லை என சுங்கத்துறை அளித்த அறிக்கையில் குறிப்பிட்டிப்பதற்கு நேரெதிராக உள்ளது. ஏன் சுங்கத்துறை இப்படி தவறான தகவலை தெரிவித்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதுமட்டுமல்லாது, 18 ஏக்கர் பரப்பளவுடைய அந்த கிடங்கு 2011ம் ஆண்டில் இருந்தே செயல்பாட்டில் உள்ளது. நரசிம்மன் என்பவருக்கு சொந்தமான அந்த கிடங்கில், 2015ம் ஆண்டில் இருந்து சுங்கத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கிடங்கில், மொத்தம் உள்ள 37 கண்டெய்னர்களில் ஒரு கண்டெய்னருக்கு 20 டன் வீதம் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் படிக நிலையில் 25 கிலோகிராம் பாலிபுரொப்பீலின் பைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளனர்.
பெரும் தீ விபத்துக்கு வழிவகை செய்யும் வகையில் சேமிப்புக் கிடங்கில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டை வைத்துக்கொண்டு சுங்கத்துறை இப்படி முழு உண்மையை மறைப்பதும் உண்மைக்கு மாறான செய்தியைத் தருவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. பேரழிவைத் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர், கண்டெய்னர் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நேரடியாக ஆய்வு செய்து, உற்பத்தியாளர் சேமிப்பு மற்றும் அபாயகரமான வேதிப்பொருள் இறக்குமதி விதிகள் 1989-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அம்மோனியம் நைட்ரேட் அனைத்தையும் உடனடியாக சுங்கத்துறை இடமாற்றம் செய்ய வேண்டும். 740 டன் அம்மோனியம் நைட்ரேட் இருக்கும் கண்டெய்னர்களின் இருப்பிடம் குறித்து அவை இடமாற்றம் செய்யப்படும் வரை பாதுகாப்பிற்காக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என சூழலியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!