Tamilnadu
கொரோனா உற்பத்தி மையமாக மாறும் குவாரன்டைன் முகாம்: அப்படிதான் இருக்கும் என சுகாதார ஆய்வாளர் அலட்சிய பதில்!
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் வட்டம் வைப்பூர் கிராமத்திலிருந்து கொரோனா பரிசோதனைக்காக திருவண்ணாமலை அடுத்த லயோலா கல்லூரிக்கு சிலர் சென்றுள்ளனர். பரிசோதனை முடிந்த பின்னர் சுகாதாரத்துறையினர் லயோலா கல்லூரியில் தங்க கூறியுள்ளனர்,
ஆனால் அந்த கல்லூரியில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தங்கும் இடங்களில் கழிவறைகள் மிகவும் சுகாதாரமற்ற வகையில் துர்நாற்றம் வீசும் வகையில் அமைந்திருக்கிறது என பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதைவிடக் கொடுமை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே இடத்தில் கழிவறை ஒதுக்கப்பட்டுள்ளது வேதனையிலும் வேதனை என தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்ட ஒருவர் தங்கி இருந்த அறையை கிருமிநாசினி தெளிக்காமல் சுத்தப்படுத்தாமல் அப்படியே வைத்துள்ளனர்.
அந்த அறையில் வேறு யாராவது தங்குவதற்கு ஒதுக்கப்படுமானால் அங்கு தங்கும் அனைவருக்கும் நோய்த்தொற்று ஏற்படும் நிலையே உள்ளது என கூறுகிறார்கள்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக அரசாங்கம் பல கோடிகள் ஒதுக்கீடு செய்து இருப்பினும் லயோலா கல்லூரி தனிமைப்படுத்தும் மையத்தில் எந்த ஒரு அடிப்படை வசதியும் சரியாக செய்து கொடுக்கப்படவில்லை.
இதுதொடர்பாக லயோலா கல்லூரியில் உள்ள கொரோனா நோயாளிகளை பராமரிக்கும் பொறுப்பில் உள்ள சுகாதார ஆய்வாளர் அரவிந்திடம் கேட்டபோது, அப்படித்தான் இருக்கும் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் புகார் அளித்துக் கொள்ளுங்கள், எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்று அலட்சியமாக பேசுவதாக தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!