Tamilnadu
“பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு முட்டையை பெற்றோரை வரவழைத்து வழங்கவேண்டும்”: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!
கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு இலவச முட்டைகள் வழங்கவும், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்கக்கோரியும் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பள்ளி மாணவ மாணவிகளுக்கு முட்டை வழங்க வேண்டும், அதே போல ஊட்டச்சத்து வைட்டமின் சி மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
முட்டைகள் வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு வாரத்துல உள்ளதால் தற்போது ஆசிரியர்கள் வேலை இல்லாமல் இருப்பதால் அவர்களது பணியை செய்யலாம் என்றும் தெரிவித்தனர். அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் ஒரே மாதிரியான மாத்திரைகளை அனைவருக்கும் வழங்க முடியாது என்றும் அதில் பிரச்சனைகள் உள்ளது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாணவ மாணவிகளுக்கு முட்டை வழங்கவேண்டும், மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நேற்ற மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் சமூக இடைவெளி பிரச்சினை ஏற்படும் என்பதால் முட்டை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் அப்படியானால் டாஸ்மாக்கை மூட அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டியது தானே என்று கேள்வி முன்வைத்தனர்.
ஆனால் அரசு தரப்பில் ஒரு நாள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரியதால் வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே வழங்கு இன்று விசாரணைக்கு வந்த போது நிதிபதிகள், ஏழை மாணவிகளுக்கு சாணிடரி நாப்கின் எப்படி விநியோகிப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ஏற்கனவே சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கிவந்த முட்டைகள் ஊரடங்கு சூழலால் தடைபட்டு விடக்கூடாது என்பதால் மாணவர்களுக்கு அரசு தொடர்ந்து முட்டை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து முட்டைகள் வழங்கலாம்.
அதே நேரத்தில் முட்டைகளை தினம்தோறும் வழங்குவதா, வாரம்தோறும் மொத்தமாக வழங்குவதா உள்ளிட்ட விஷயங்களை அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
Also Read
-
சென்னை MTC பேருந்துகளில் கட்டணமின்றி 20 கிலோ எடை வரை செல்லலாம்- எதற்கெல்லாம் கட்டணம்? முழு விவரம் உள்ளே !
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !