Tamilnadu
“மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அரசு காப்பகங்களில் சேர்க்கவேண்டும் ” : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் கற்பகம் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் தற்போது பல்வேறு பொது இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு பலர் சுற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
அதில், பலருக்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் ஆனால் அவர்களுக்கு போதிய உணவும் தங்குமிடமும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே தமிழக அரசு அவர்களைக் கண்டறிந்து முகாம்களுக்கு அனுப்பி சரி செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதாஅடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகரன் தொடர்பாக தினகரன் நாளிதழில் வந்த செய்தியும் சுட்டிக்காட்டிப் பேசினார் குறிப்பாக பழனி மலையை சுற்றி பல்வேறு மனநலம் பாதித்தவர்கள் சுற்றித் திரிவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரியை நியமித்து அந்த பகுதியில் உள்ள மனநலம் பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களை அரசு காப்பகத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பான அறிக்கையை வருகிற 18-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?