Tamilnadu
“தற்கொலை செய்துக் கொண்ட கூலி தொழிலாளர்கள்” : வறுமையில் தவித்த குடும்பத்திற்கு தி.மு.க நிர்வாகி உதவி!
கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். மேலும் இந்த ஊரடங்கில், பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக அன்றாடம் பிழைப்பு நடத்துபவர்களின் குடும்பங்கள் ஏழை எளிய பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இதனுடைய தாக்கம் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது. புதுக்கோட்டை நகர்புறத்தில் கடந்த மாதம் ஆட்டோ ஓட்டுனர் தன்னுடைய வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தான் பணிபுரிகின்ற அதே இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வடு மறைவதற்குல் புதுக்கோட்டை மச்சுவாடி சிவானந்த நகர் இரண்டாம் வீதியை சேர்ந்த பூக்கடை தொழிலாளி கோவிந்தன் வருமானம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். குடும்பத்தை நடத்த முடியாத துர்பாக்கிய நிலைக்கு சென்ற காரணத்தினால் புதுக்கோட்டையில் உள்ள பல்லவன் குளத்தில் குதித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
கோவிந்தன் இச்சம்பவம் புதுக்கோட்டை மக்கள் மட்டுமல்லாது புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க பொது மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்ட காரணத்தினால் புதுக்கோட்டை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பல்வேறு தருணங்களில் பொது மக்களுக்கு பல உதவிகளை நிவாரணம் வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ அணி பொறுப்பாளர் மருத்துவர் முத்துராஜா புதுக்கோட்டையில் தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ டிரைவர் குடும்பத்திற்கு பண உதவிகளையும் பொருளுதவியும் வழங்கி அவர்களுடைய குடும்பத்தில் உள்ள இருவருக்கு தன்னுடைய சொந்த மருத்துவமனையில் பணிநியமனம் கொடுத்து வந்தார்.
இந்நிலையில் பூக்கடை தொழிலாளி கோவிந்தன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி கேள்விப்பட்ட மருத்துவர் முத்துராஜா இன்று அவருடைய இல்லத்திற்கு நேரடியாகச் சென்று அவருடைய குடும்பத்தில் உள்ள இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தைக்கும் மறைந்த கோவிந்தன் மனைவியிடம் குடும்ப நிவாரண நிதியை இன்று வழங்கினார்.
நிதியைப் பெற்றுக் கொண்ட கோவிந்தன் குடும்பத்தினர் கண்ணீர் மல்க அரசு மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உதவி செய்யாத நேரத்தில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க திராவிட முன்னேற்ற கழகத்தின் மருத்துவ அணி அமைப்பாளர் வழங்கும் நிதி தங்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி இருப்பதாகவும் தன்னுடைய குழந்தைகளின் படிப்புச் செலவை மருத்துவர் முத்துராஜா ஏற்றிருப்பது ஆறுதலான விஷயம் என தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!