Tamilnadu

“5ம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி என்பது கட்டாயமில்லை” : மத்திய கல்வித்துறை அமைச்சர் பேட்டி!

மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கையில் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியிலியே பயிற்றுவிக்க வேண்டும். அதனை எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கவும் செய்யலாம் என்று கூறப்பட்டிருந்தது.

மத்திய அரசுப்பள்ளிகளில் இதனை செயல்படுத்த இயலாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். நாடுமுழுதும் மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் படி முதல் வகுப்பு முதல் ஆங்கிலத்தில்தான் பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்த பள்ளிகளில் தாய்மொழிக்கல்வியை செயல்படுத்துவது இயலாத காரியம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒவ்வொரு பள்ளியிலும் பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். எனவே சி.பி.எஸ்.இ பள்ளிகளும் இதனை செயல்படுத்த இயலாது என்று கூறியுள்ளன.

இந்நிலையில், இது குறித்து பேட்டியளித்துள்ள அளித்துள்ள மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி என்பது கட்டாயமில்லை. மாநில அரசுகள் விருப்பத்துக்கு ஏற்ப முடிவு செய்யலாம் என்றுதான் புதிய கல்விக் கொள்கை கூறப்படுட்டுள்ளது என விளக்கம் அளித்தார்.

Also Read: புதிய கல்விக் கொள்கை ஏன் அபாயகரமானது? : 2016ம் ஆண்டே இதன் மோசடியை சுட்டிக்காட்டிய முத்தமிழறிஞர் கலைஞர்!