Tamilnadu
சாதி பாகுபாட்டால் மீனவ குடும்பத்தை ஒதுக்கி வைத்த கட்டப்பஞ்சாயத்து கும்பல் - காரைக்காலில் அராஜகம்!
புதுச்சேரியில் காரைக்கால் நகராட்சிக்கு உட்பட்ட கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் உள்ள 25 குடும்பங்களில் உள்ள 290 பேர் "வனத்தாய் குடும்ப உறுப்பினர்கள்" என அழைக்கப்படுகின்றனர். மீன்பிடித்தல், விற்பனை, ஐஸ் கட்டிகள் விற்பனை போன்றவை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வாழ்வாதாரம் ஈட்டி வருகின்றனர். வனத்தாய் மீனவ குடும்பத்தில் உள்ள மூத்தவரான வீரசோழன் குடும்பத்தினரை அமைப்பிலிருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரை விட்டு விலக்கிவைத்த உத்தரவால் யாரும் உதவி செய்ய அஞ்சுவதாலும், வேலைக்கு ஆட்களை அமர்த்த தயங்குவதாலும் சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், தற்போது வனத்தாய் குடும்பத்தினர் மீதான உத்தரவு மீது நடவடிக்கை எடுக்க கோரி மே மாதம் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆகையால் தங்களை ஊரைவிட்டு விலக்கி வைத்த செட்டியார், நாட்டார், காரியக்கார், பஞ்சாயத்தார் என்ற அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
சாதி அடிப்படையில் நடத்தப்படும் அந்த அமைப்பு கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டுமென இடைக்கல கோரிக்கையும் வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஆகஸ்ட் 20ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!