Tamilnadu
“கொரோனா டெஸ்ட் எடுப்பதில் குளறுபடி”: அதிகாரிகளின் அலட்சியத்தால் தொற்று இல்லாதவருக்கு கொரோனா உறுதியானது!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி சீதாராம் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணியமன் ( வயது 44 ). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல்நல குறைவின் காரணமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சென்று தன்னை பரிசோதித்தது கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, உடல் நல குறைவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் ஒரு சில தினங்களில் சிறிதளவு உடல்சோர்வு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கள்ளக்குறிச்சி நகராட்சியில் இருக்கின்ற அரசு மருத்துவமனைக்குச் சென்று தன்னை கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டார்.
இதனிடையில் அடுத்த சில இரண்டு தினங்களிலேயே நகராட்சி அலுவலகத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் இருந்து, பணியாளர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்களுக்கு கொரோனோ பாசிடிவ் என ரிசல்ட்ட்டில் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், நீங்கள் உடனடியாக கொரனோ சிகிச்சை மையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.
இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியமன், “இல்லை எனக்கு சர்க்கரை வியாதி உள்ளதால் நான் மேல்மருவத்தூர் சென்று தனியார் மருத்துவமனையில் சேர்ந்து கொள்கிறேன்” என்று கூறியதுடன் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சென்று கடந்த 3 தினங்களாக சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், நேற்று காலை மீண்டும் சுப்பிரமணியன் வீட்டிற்கு அரசு மருத்துவமனை அதிகாரிகள் போன் செய்துள்ளார். தங்களுக்கான கொரனோ ரிசல்ட் வந்துள்ளது என்று கூறியுள்ளனர். உடனடியாக வீட்டில் இருந்த அவரது உறவினர்கள் குழப்பமடைந்து நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று டெஸ்ட் ரிசல்ட்டை வாங்கி பார்த்தபோது, அவருக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், “மருத்துவமனையில் உள்ள அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால்தான் கொரோனா தொற்று இல்லாத ஒரு நபரை சிகிச்சை மையத்திற்கு அனுப்பி, அவருக்கு நோய் பரப்பி விட்டீர்கள்” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பாக சுப்பிரமணியனின் தொடர்புக் கொண்டபோது அவர், நிலைகுலைந்து போனார். ஏனென்றால் ஏற்கனவே சர்க்கரை வியாதிகள் இருக்கும் அவர், தன்னை சிகிச்சையின் மூலம் பாதுகாத்து வந்துள்ளார் என்ற போதிலும் பல ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் அலட்சியத்தால் நாமே வந்து கொரோனா வாங்கிக் கொண்டோம் என்று புலம்பி மனம் நொந்து பேசியுள்ளார்.
அரசு மருத்துவமனை அதிகாரிகள் உடைய அலட்சியப் போக்கினால் நல்ல நிலையில் இருந்த ஒருவர் நோயாளியாக மாற்றப்பட்டுள்ளது கள்ளக்குறிச்சி மக்களிடை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அரசு மருத்துவமனையில் சென்று டெஸ்ட் எடுக்க மக்கள் தற்போது அஞ்சுகின்ற நிலையில் உள்ளனர்.
இனிவரும் காலங்களில் மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் இதுபோன்ற தவறுகள் நிகழாத வண்ணம் இருக்க வேண்டும் என்றும் அவரது உறவினர்களும் மனவேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரன் குராலா இதுபோன்ற தவறு செய்யும் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!