Tamilnadu
தமிழகத்தில் சீரழியும் சட்டம் ஒழுங்கு: கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு -சுப்புலட்சுமி ஜெகதீசன் சாடல்
தி.மு.க., துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் காணொலிக் காட்சி வாயிலாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு:-
“கொரோனா நோய்த் தொற்றுக்காலத்திலும் மக்களுக்காக பணியாற்றி, தகவல்களை கொண்டு சேர்க்கும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி.
சங்க காலத்தில் சிறப்பாக வாழ்ந்த பெண்களின் நிலை தற்போது தந்தை, கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினரை சார்ந்து வாழ வேண்டியதாகியுள்ளது. தலைவர் கலைஞர் ஆட்சியில், பெண்கள் யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது, என்பதற்காக பல்வேறு திட்டங்களை இயற்றி பெண்களை தற்சார்பாக வாழ முயற்சியை எடுத்தார்.
காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தாலும் உடனடியாக விசாரணை மற்றும் தக்க நடவடிக்கை எடுக்கப்படாததால், பலரும் வழக்கு கொடுக்கவே தயங்குகின்றனர். எனவே அரசு காவல்துறையில் போதுமான அலுவலர்களை நியமித்து, புகாரளிக்க வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
படிக்கப்போகும் பெண்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பு இல்லை, பணியாற்றும் இடங்களில் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பெண்களின் பாதுகாப்புக்கென மார்ச் மாதம் ஒரு அமைப்பை அரசு உருவாக்கியது. அதன் தலைமை காவல் அதிகாரி சிறப்பாக பணியாற்றி வந்தார், உடனடியாக அரசு அவரை மற்றொருத் துறைக்கு மாற்றியது. தற்போது அந்த அமைப்பு பணியாற்றுகிறாதா என்ற கேள்வி எழுகிறது.
வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படவேண்டும், அப்போதுதான் எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் குறையும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்த போதும், வழக்குகளில் வெறும் 3 சதவிகத குற்றவாளிக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. 2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டும், இது வரை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு சிறப்பாக இருப்பதாக முதலமைச்சர் கூறியது குறித்தக் கேள்விக்கு, சமீபத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்ற தொடர் பாலியல் வழக்கில் குற்றவாளிகளில் சிலர் அமைச்சரின் உறவினர் என்பதால், வழக்கை உரிய முறையில் காவல்துறையினர் விசாரிக்காமல் குற்றவாளிகள் தற்போது குண்டர் தடுப்புப்பிரிவில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறினார்.” எனக் கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!