Tamilnadu
ஊரடங்கில் இயங்காத வாகனங்களுக்கு வலுக்கட்டாயமாக வரி வசூலிப்பதா? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், அனைத்து வாகனங்கள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாகனங்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கும்படி, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், வாகன போக்குவரத்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பியுள்ளதாகவும், சாலை வரி செலுத்தச் சென்ற கல்வி நிறுவன வாகனங்களுக்கு நூறு சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, கோவை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி நிர்வாகங்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், ஊரடங்கு காலத்தில் சாலையில் இயக்கப்படாத வாகனங்களுக்கான வரி வசூலை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி ஊரடங்கு காலத்தில் சாலை வரி செலுத்துவதில் இருந்து தங்களுக்கு உரிமை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் மிரட்டி வருவதால், தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு சாலை வரி விதிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளது.
அதேபோல, சாலை வரி செலுத்தும்படி நிர்பந்திக்க கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மனுவுக்கு ஜூலை 22ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மனுதாரர் சங்க உறுப்பினர்களிடம் வரி மற்றும் அபராதம் செலுத்தும்படி கூறி கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?