Tamilnadu
திருமணத்திற்காக பெற்றோர் படும் கஷ்டத்தை பார்த்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: காஞ்சிபுரத்தில் நடந்த சோகம்!
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த பழைய நல்லூர் அண்ணா நகரை சேர்ந்த சம்பத்(51) என்பவர் மனைவி மகளுடன் வசித்து வந்தார். 21 வயதான ரேவதிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என பெற்றோர்கள் முடிவெடுத்தனர்.
மகளை திருமணம் செய்து கொடுக்க தங்க நகைகளை கஷ்டப்பட்டு சேர்க்க வேண்டியுள்ளது என்றும் கொஞ்சம் கொஞ்சமாக நகையை சேர்த்து வருகிற ஜனவரி மாதம் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என பெற்றோர்கள் பேசிக்கொண்டிருந்ததை மகள் ரேவதி கேட்டுக்கொண்டிருந்தார்.
நேற்று (13.7.2020) திருவேற்காட்டில் உள்ள சம்பத்தின் மாமியார் முனியம்மாள் அவர்கள் வீட்டில் அரை சவரன் தங்க நகை உள்ளது என்றும் வந்து வாங்கிச் செல்லுங்கள் என்று கூறியதாகவும் இதை தனது மகளிடம் நானும் அம்மாவும் சென்று அந்த நகையை வாங்கி வருகிறோம் என்றும் சிறுக சிறுக சேர்த்து வைத்தால் தான் உனக்கு திருமணம் செய்ய முடியும் அம்மா என்று கூறி விட்டு சென்றுள்ளார்கள்.
ரேவதியின் தந்தை சம்பத் மாலை 6:30 மணி அளவில் திருவேற்காட்டில் இருந்து வீட்டுக்கு வரும்போது போன் செய்து பார்த்தபோது தனது போனை மகள் எடுக்காததால், வீட்டிற்கு வந்து கதவை தட்டியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து பார்த்தபோது, மகள் ரேவதி வீட்டில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதை பார்த்து கதறி அழுதனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள சோமங்களம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று ரேவதியின் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட ரேவதி தனியார் செக்யூரிட்டி சர்வீஸில் பீல்ட் ஆபிசராக வேலை செய்து வந்தார் என்றும் காதல் விவகாரம் எதுவும் இல்லை என்றும் பெற்றோர் தனக்கு திருமணம் செய்து வைப்பதற்காக படும் கஷ்டத்தை பார்த்து தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !