Tamilnadu
“உயிரைப் பறித்த செங்கோட்டையனின் அறிவிப்பு”: ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கித்தராததால் மாணவன் தற்கொலை!
திண்டுக்கல் மாவாட்டம் சின்னாளபட்டி பூஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா. கணவரை இழந்த காஞ்சனா கடுமையான பொருளாதார சூழலில் மூன்று மகன்களை வளர்த்து வந்துள்ளார்.
இதில் மூன்றாவது மகன் பிரதீப் அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து தற்போது 12ம் வகுப்புக்கு செல்கிறார். இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அறிவித்ததால் தனது அம்மாவிடம் ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார்.
குடும்பச் சூழல் காரணமாக சில நாட்கள் கழித்து வாங்கி தருவதாக அவர் சமாதானம் செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரதீப் வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு சென்றுள்ளார். அவரது நண்பர்கள் அழைத்து வந்து வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர்.
இதனால், ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாமல் போகும் என்ற சோகத்தில் பிரதீப் மீண்டும் வெளியே சென்றுள்ளார். வீட்டை விட்டு வெளியே சென்ற பிரதீப்பை அவரது நண்பர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்று காலை அம்பாத்துறை - காந்திகிராமம் இடையிலான ரயில்வே தண்டவாளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்த பிரதீப் பற்றி அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலிஸார் அவ்வழியாக அந்த வந்த ரயில் மோதி மாணவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். மாணவர் தற்கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் நேற்றைய தினம் நாகை மாவட்டத்தில் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் போனதால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால், தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?