Tamilnadu
ஒரே நாளில் 3,645 பேருக்கு தொற்று... 46 பேர் பலி - தமிழகத்தில் அதிவேகமாகப் பரவிவரும் கொரோனா!
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 122 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதுவரை பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 1,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், சென்னையில் மொத்த பாதிப்பு 49, 960 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் 37 பேர், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா 3 பேர் மதுரையில் 2 பேர், விருதுநகரில் ஒருவர் என மொத்தம் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,358 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 41,357 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 32,305 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?