Tamilnadu

புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு : இன்று மட்டும் 1,982 பேருக்கு தொற்று... 18 பேர் பலி! #Corona

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :

“தமிழகத்தில் இன்று 1,972 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 49 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.

இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் அதிகபட்ச எண்ணிக்கையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்றைய பாதிப்பின் மூலம் கொரோனாவால் தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் தமிழகத்தில் 18 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அவர்களில் 10 பேர் அரசு மருத்துவமனையிலும், 8 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர்.

இன்று சென்னையில் 15 பேரும், செங்கல்பட்டில் 2 பேரும், திருவள்ளூரில் ஒருவரும் என மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 18,231 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 1,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 22,047 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 18,281 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தலைநகர் சென்னையில் தொடர்ந்து தொற்று பரவ்சல் தீவிரமடைந்து வருகிறது. சென்னையில் மட்டும் இன்று 1,479 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,924 ஆக உயர்ந்துள்ளது.

Also Read: உலக அளவில் கொரோனா பாதிப்பில் 4வது இடத்தில் இந்தியா : இனியாவது மோடி தற்பெருமை பேசாமல் நடவடிக்கை எடுப்பாரா?