Tamilnadu

சென்னையில் மட்டுமே 398 பேர் கொரோனாவால் பலி... இறப்பு விகிதம் குறைவு என நாடகமாடும் எடப்பாடி அரசு!

சென்னையில் 8வது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. அதன் மூலம் இதுவரை 22 ஆயிரத்து 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோல, உயிரிழப்பு எண்ணிக்கையும் தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிகமாக உள்ளது. அதன்படி, மொத்த பலி எண்ணிக்கையான 269 பேரில் 212 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த நிலையில், கடந்த ஜூன் 4ம் தேதி வரையில் சென்னையில் மட்டுமே 398 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், அதில் 50 சதவிகித இறப்பு எண்ணிக்கையை எடப்பாடி அரசு மறைத்துள்ளதாகவும் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: ஒரே மாதத்தில் 500க்கும் மேலான உயிரிழப்புகள் பதிவு!? - சென்னையின் நிலவரத்தை திட்டமிட்டு மறைக்கிறதா அரசு?

அதுமட்டுமல்லாமல், தினந்தோறும் 10 பேராவது சென்னையில் கொரோனாவுக்கு பலியாகிறார்கள் என்றும் அதனை அரசு திட்டமிட்டே மறைக்கிறது என சமூக ஆர்வலர்களும், மருத்துவர்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மேலும், வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலும், மருத்துவமனைக்கு சென்ற பிறகும் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

அதுபோக, அவ்வாறு உயிரிழப்பவர்களின் மருத்துவ அறிக்கையில் முதலில் கொரோனா தொற்றுள்ளவர்கள் என குறிப்பிட்டுவிட்டு பின்னர், அதனை சிவப்பு மையைக் கொண்டு மறைத்து வேறு உபாதைகளால் உயிரிழந்தவர்கள் என கணக்குகாட்டும் செயலிலும் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது.

எடப்பாடி அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் மக்களின் உயிருடன் விபரீதமாக விளையாடுவதை விடுத்து வெளிப்படைத்தன்மையுடன் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், சமூக சமத்துவதற்கான மருத்துவ சங்கத்தின் பொதுச்செயலாளரான ரவீந்திரன் தனது ஃபேஸ்புக்கில், எடப்பாடி அரசின் மேற்குறிப்பிட்ட தில்லாலங்கடிகள் தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பை குறிப்பிட்டு, அரசின் மிரட்டலுக்கு அஞ்சியோ, எதிர்த்து பேசாமல் மக்கள் விரோத செயல்களில் ஈடுபடக் கூடாது.

நேர்மையாக செயல்பட வேண்டும் என மருத்துவர்களுக்கு வலியுறுத்தியுள்ளார், மேலும், பதவிகளையும், அதிகாரத்தையும், மக்களுக்காக அரசு பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “கொரோனா வீரியத்தை மறைத்ததோடு நோய்த் தொற்றை தடுப்பதில் எடப்பாடி அரசு தோல்வி” - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்