Tamilnadu
இன்றும் 1000-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு... ஒரே நாளில் தமிழகத்தில் 13 பேர் பலி! #CoronaUpdates
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :
“தமிழகத்தில் இன்று மேலும் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் 55 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 73 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 11,094 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 809 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் 12 பேரும், செங்கல்பட்டில் ஒருவரும் என மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து இன்று ஒரே நாளில் 536 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 13,706 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 10,680 பேர் சிகிச்சையில் உள்ளனர்.”
Also Read
-
ரூ.30.27 கோடி செலவில் 17 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“பெண்களின் சமூக வாழ்வை உயர்த்தும் திராவிட மாடல்!” : அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்!
-
”கனமழை - தயார் நிலையில் இருக்க வேண்டும்” : மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
86,150 மாணவர்களுக்கும்,8615 ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் அன்பில் மகேஸ்
-
திருப்பெரும்புதூரில் ESI மருத்துவமனை அமைக்க அனுமதி - TR.பாலு MP-யின் தொடர் முயற்சிகளுக்கு வெற்றி !