Tamilnadu
அரபிக்கடலில் வலுவடைகிறது புதிய புயல்.. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு தென் தமிழகம், உள் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது நாளை தாழ்வு மண்டலமாகவும் அதனை தொடர்ந்து நாளை மாறுநாள் விரைவாக புயலாகவும் வலுவடைந்து மேற்கு கடற்கரையை ஒட்டி, வடக்கு நோக்கி நகரும்.
அதன் காரணமாக, தென் கிழக்கு , தென் மேற்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் கேரள கடலோர பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசும் என்பதால், ஜூன் 4ம் தேதி வரை மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 38 டிகிரி செல்ஸியசாகவும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்ஸியசாகவும் பதிவாகும் என குறிப்பிட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் சேலம் வீரகனூரில் 7 செ.மீ, கோவை வால்பாறை, வேலூர் அலங்காயம், திருப்பூர் திருமூர்த்தி மலை ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ மழையும், கிருஷ்ணகிரி சூளகிரியில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!