Tamilnadu
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 6 வரை அவகாசம் நீட்டிப்பு! #CoronaLockdown
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம், ஜூன் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வீடுகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என, வழக்கறிஞர் ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், சொத்து வரி, குடிநீர் கட்டணம், விவசாய கடன் தவணைகள் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணங்களை மே 6 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வீடுகளுக்கான குறைந்த அழுத்த மின் இணைப்புக்கான கட்டணங்களை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31 வரை நீட்டிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 8 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!