Tamilnadu

மதுப்ரியர்களை சோகத்தில் ஆழ்த்திய போலி ‘டாஸ்மாக்’ ஆன்லைன் டெலிவரி இணையதளம் : நடவடிக்கை எடுத்த சைபர் க்ரைம்

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அனைத்து நிறுவனங்களுடன் டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்தது. அதனையடுத்து பல மாநில அரசுகள் மதுக்கடைகளை திறந்தது. தமிழகத்திலும் சென்னையை தவிர பிற மாவடங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்தது அ.தி.மு.க அரசு.

பின்னர் கடைகள் திறக்கப்பட்ட இரண்டே நாளில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. டாஸ்மாக் கடைகள் திறப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள், “டாஸ்மாக் கடைகளில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளும் கடைபிடிக்கப்படவில்லை.

ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அரசு விரும்பினால் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யலாம்” என உத்தரவிட்டனர். இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த மனு இன்று விசாரனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் ஒன்று சமீபத்தில் தீடிரென இயங்கிவந்தது. தமிழகத்தைச் சேர்ந்த பலரும் அதன் மூலம் மதுபாட்டில்கள் வாங்க இணையத்தில் குவிந்தன.

மேலும் ஆன்லையனில் மதுபானம் டெலிவரி என்று குறிப்பிட்டுள்ள நிலையில் பயனர்களின் தனி விவரமான பெயர் முகவரி உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படுகின்றன அதுமட்டுமின்றி, மது வகைகளும் மற்ற சில உணவு வகைகளும் அந்த இனையத்தில் இடம் பெற்றுள்ளன. அதில், டாஸ்மாக் மதுபானங்கள் வீட்டிற்கே வந்து டோர் டெலிவரி செய்யப்படும். ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும்.

Also Read: ஆன்லைன் மது விற்பனையை ஏன் எதிர்க்கிறது எடப்பாடி அரசு - கமிஷன் அடிக்க முடியாத விரக்திதான் காரணமா ?

போன்-பே உள்ளிட்டவை ஏற்கப்படும். தரமான மதுவகைகள் என்று போன் நம்பருடன் விளம்பரம் செய்து வருகின்றன. ஆர்டர் செய்த 24 மணிநேரத்தில் டெலிவரி செய்யப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுவிற்பனை குறித்து வந்த போலி டாஸ்மாக் ‘லிங்க்’ தடை செய்யப்பட்டுவிட்டதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த விளம்பரம் தாங்கள் கொடுத்ததல்ல, என்று தமிழக டாஸ்மாக் நிர்வாகத்தின் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

Also Read: “மக்களின் உயிரை விட டாஸ்மாக் மூலம் வரும் வருமானம் முக்கியமா?” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!