Tamilnadu
“மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க திராணியற்ற அரசு அ.தி.மு.க அரசு” - தமிழச்சி தங்கப்பாண்டியன் சாடல்!
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க, ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை வலியுறுத்தி, அதன் மூலம் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் என அனைவரும், ஊரடங்கால் முடங்கியுள்ள தமிழக மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், சென்னை அசோக் நகர் பகுதிக்கு உட்பட்ட, 1000க்கும் மேலான ஏழை எளிய மக்களுக்கு 5 கிலோ அரசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப் பாண்டியன் வழங்கினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன், தமிழக மக்களுக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் வாயிலாக சொல்ல விரும்புவது, எப்போதும், எந்த காலகட்டத்திலும் உடன் நிற்பது தி.மு.க மட்டும்தான்.
காவிரி, தமிழக மக்களின் உயிர்நாடி. அது நம்முடைய ரத்த ஓட்டத்தில் கலந்துள்ளது. அந்த உரிமைக்காக சட்டப்படி நாம் பன்னெடுங்காலமாக போராடி வருகின்றோம். ஆனால், அந்த காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு ஜல்சக்தி துறையோடு இணைந்து அறிவித்துள்ளது மிகப்பெரிய அநீதி.
இதற்காக அ.தி.மு.க அரசு ஒரு அறிக்கை கூட விடுக்கவில்லை. இப்படிப்பட்ட அநீதியை எதிர்த்து மத்திய அரசை ஒரு கேள்விக் கேட்கக் கூட திராணியில்லாத அரசாகவே உள்ள தமிழக அரசு, அதிகாரிகளை வைத்து பதில் அனுப்புவது எந்த விதத்தில் நியாயம்?” என தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !