Tamilnadu

“குறட்டை விட்ட மனைவியை கொலை செய்த கணவர்” : ஜோலார்பேட்டையில் நடந்த கொடூரம்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டதால் குழந்தைகள் உள்ளிட்டோர் வீட்டில் இருப்போர்கள் ஒரே இடத்தில் முடங்கிக்கிடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தினசரி கூலித் தொழிலாளர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலர் தங்களின் பணப்பிரச்சனை, வேலையிழப்பு போன்றக் காரணங்களால் கடுமையான மன அழுத்ததிற்கு ஆளாயுள்ளனர். இந்த சூழலில், வீடுகளில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்கொடுமை அதிகரித்துள்ளது.

இந்த குடும்ப வன்முறை சில இடங்களில் கொலைகளில் முடிந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதி குடியானக்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் சங்கர் விமலா தம்பதி. கூலி வேலை செய்யும் சங்கருக்கு அவரது மனைவிக்கு ஏற்கனெவே வெவ்வேறு நபர்களுடம் திருமணம் நடந்து விவகாரத்து நடந்துள்ளது. பின்னர் இருவரும் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். இப்போது இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி இருவருக்கும் இடையில் சண்டை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஊரடங்கால் வீட்டில் இருந்த இருவருக்கும் வாக்குவாதம் முற்றி தெருவரை சண்டை நீடித்ததாக அக்கம் பக்கத்தினர் கூறிகின்றனர். இந்த சூழலில் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காத நிலையில், குழந்தை அழும் சத்தம் மட்டும் வீட்டில் இருந்து கேட்டுள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் விமலா உயிரிழந்த நிலையிலும், தலையில் படுகாயத்துடன் சங்கரும் படுத்துக் கிடந்துள்ளனர். குழந்தை அம்மாவைப் பார்த்தபடி ஒரு ஓரத்தில் நின்று அழுதுக் கொண்டிருந்ததுள்ளது.

இதனைடையடுத்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்ப்பேட்டைக் காவல்துறையினர் விமலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சங்கரை சிகிச்சைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், போலிஸார் இதுதொடர்பாக விசாரித்தப்போது அதிர்ச்சி தகவலை சங்க தெரிவித்துள்ளார். அதன்படி முதற்கட்ட விசாரனையில், சங்கர் நேற்று இரவு தூங்க சென்ற விமலாவை தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் விமலா மறுத்துவிட இருவருக்கும் சண்டை மூண்டுள்ளது. பின்னர் சிறிது நேரத்திலேயே இருவரும் தூங்கச் சென்றுள்ளனர்.

அப்போது காலை 3 மணி அளவில் கோபம் தனியாமல் இருந்த சங்கருக்கு விமலாவின் ஆழ்ந்த உறக்கமும், அவரின் குறட்டையும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சங்கர் வீட்டில் வெளியே இருந்த பெரிய பாறங்கல்லை எடுத்துவந்து தூங்கிடந்த விமலாவின் தலையில் போட்டுள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த விமலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பின்னர் போலிஸிடம் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக அதேக் கல்லில் சங்கரும் மூட்டிக் கொண்டு நாடகமாடியுள்ளார். இதனையடுத்து மணைவியை கொலை செய்த வழக்கில் சங்கர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “மருத்துவ மாணவி மர்ம மரணம் - விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்” : தீவிர விசாரணையில் இறங்கிய போலிஸ்!