Tamilnadu
“இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது; தமிழகத்தில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும்”: மருத்துவர்கள் சங்கம்!
உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் தீவிரமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முன்னிலையில் இருந்து போராடும் மருத்துவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது.
குறிப்பாக PPE - என்று சொல்லக்கூடிய பாதுகாப்பான தற்காப்பு உடைகள் போன்றவை இல்லாமல் மருத்துவர்களும் செவிலியர்களும் கடும் நெருக்கடியை சந்திக்கின்றனர். சில இடங்களில் பிளாஸ்டிக் ரெயின் கோர்ட் ஆடையை அணிந்து மருந்துவம் பார்க்கின்றனர்.
இதனால் நாட்டில் பல பகுதியைச் சேர்ந்த மருத்துவர்களும் செவிலியர்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி சில இடங்களில் மருத்துவர்களை அவர்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டை காலி செய்யவும் வலியுறுத்துகின்றனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து உயிரிழந்த மருத்துவர்கள், சடலமான பின்னர் அவர்களின் உடல்கள் பல மோசமான சூழலை சந்திக்கும் சூழல் இந்தியாவில் உருவாகியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் டாக்டர் சைமன், டாக்டர் லெட்சுமி நாராயண ரெட்டி, டாக்டர் ஜெயமோகன் ஆகியோரது உடல்களுக்கு கௌரவமான முறையில் இறுதி நிகழ்ச்சிகள் நடத்த முடியாத அவல நிலை ஏற்பட்டது.
இதுபோல பல்வேறு இக்கட்டான சூழலை சந்தித்துவந்த மருத்துவர்கள் நாடுதழுவியப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். மேலும், சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர்களைப் பாதுகாக்க அவசர அடிப்படையில் ஒரு சட்டத்தை கொண்டு வருமாறு இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியது.
அதேப்போல் தமிழகத்தில், மருத்துவர்களை பாதுக்காக்க கோரி, மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி இந்தியா முழுவதும் மருத்துவர்களின் சார்பில் இன்று இரவு 9.00 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம் நடத்தப்போவதாகவும் சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்திருந்தனர்.
இந்த சூழலில் மருத்துவர்களின் போராட்ட அறிவிப்பால் மிரண்டு போன மோடி அரசு உடனே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சங்கத்துடன் உரையாடினார். அதேப்போல் தமிழகத்தில் எடப்பாடியும் மருத்துவர்களிடம் உரையாடினர்.
இதனையடுத்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய இந்திய மருத்துவ சங்கம் நாளை அறிவித்திருந்த கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் போராட்டத்தை வாபஸ் பெற்றது. ஆனால், தமிழகத்தில் உள்ள மருத்துவர் சங்கத்தினர் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற மருத்துவிட்டனர்.
இதுதொடர்பாக மேலும் பேசிய போராட்டக்குழு மருத்துவர்கள், “வூஹானில் கொரோனா பரவத்தொடங்கிய பிறகு 3 மாதங்களுக்கு மேல் கால அவகாசம் இருந்த போதிலும் மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பு கவசங்கள், பரிசோதனை கருவிகள் போன்றவற்றை போதிய அளவு கொள்முதல் செய்யவில்லை.
உற்பத்தியும் செய்யவில்லை. இதன் காரணமாக ,பல இடங்களில் கொரானா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் மருத்துவப் பணியாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்றுக்கும் உள்ளாகின்றனர்.
பொது இடங்களில், மருத்துவர்களும், செவிலியர்களும் மருத்துவப் பணியாளர்களும் தாக்கப்படுகின்றனர். இது குறித்து மத்திய மாநில அரசுகள் போதிய நடவடிகைகளை எடுக்கவில்லை. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுக்காப்பற்ற சூழல் நிலவுகிறது.
ஆனால் இவ்வளவு நாள் இதில் தலையீடாமல் எனக்கு என்ன தான் இந்த அரசாங்கள் செயல்பட்டது. அதனால் இந்த அரசு சொல்வதை ஏற்க இயலது. திட்டமிட்டபடி, இன்று இரவு 9.00 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்றி எங்களது போராட்டம் நடைபெறும். எங்கள் போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு அளிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !