Tamilnadu

“தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா உறுதி; 27 பேர் குணமடைந்தனர்” - பீலா ராஜேஷ் பேட்டி!

நாடு முழுவதும் 6 ஆயிரத்தை கடந்துள்ள கொரோனா வைரஸின் பாதிப்பு எண்ணிக்கை தமிழகத்திலும் ஏறுமுகத்தைச் சந்தித்து வருகிறது. நேற்றுவரை 738 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஏப்.,09) மேலும் 96 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை இன்று மாலை சந்தித்த அவர் கூறியதன் விவரம் வருமாறு:

தமிழகத்தின் 34 மாவட்டத்தில் 59 ஆயிரத்து 918 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். இது நேற்றைய எண்ணிக்கையை விட 821 பேர் குறைவு. இன்றைக்கு 96 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 834 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரையில் 27 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீட்டுக்குச் சென்றுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் எந்த உயிரிழப்பும் தமிழகத்தில் ஏற்படவில்லை. இன்றைக்கு பாதிக்கப்பட்ட 96 பேரில் அதிகப்படியாக ஈரோடு மாவட்டத்தில் 26 பேரும், நெல்லையில் 16 பேரும் உள்ளனர்.

தமிழகத்தின் தலைநகராக உள்ள சென்னையில் இன்று 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் 166 ஆக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது.

Also Read: #Corona LIVE | தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 1477 ஆக உயர்வு!