Tamilnadu

கொரோனா பாதிப்பால் தவிக்கும் தமிழகம் : அ.தி.மு.க எம்.எல்.ஏ,.க்கள் எங்கே?

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸால் 1,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேப்போல் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த மாவட்டங்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளது மேலும் கோரோனா பாதிப்பு இருந்த குடும்பத்தினர் அவர்கள் அந்த அந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா சோதனை செய்யப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் மற்றும் மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபரகாங்களை தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.,க்கள் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, மாவட்டம் தோறும் மக்களுக்கு தேவையான உதவிகளை நேரடியாக களத்திற்குச் சென்று செய்துவருகின்றனர்.

தி.மு.க எம்.பி மற்றும் தங்களுடைய சொந்த கட்டிடம் மற்றும் வாகனங்களை கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனையாகவும் வாகன போக்குவரத்தைப் பயன்படுத்திக்கொள்ளவும் அரசுக்கு வழங்கியுள்ளனர்.

ஆனால், தமிழகத்தில் இவ்வளவு பாதிப்பு அதிகரிக்கும் போது அ.தி.மு.க வை சார்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏ க்கள் தங்களது தொகுதி பக்கம் மக்களுக்கு தேவையான உதவிகளையோ மருத்துவ உபகரணங்களையோ வழங்கவில்லை.

இதனால் மக்கள் அ.தி.மு.க எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது அதிருப்தி அடைந்து தங்களது கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். அதே நேரத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளை நேரில் வந்து அளிக்கும் தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு தங்களது நன்றியும் வாழ்த்துக்கள தெரிவித்துளனர்.

Also Read: “நமஸ்தே ட்ரம்ப் முதல் ஆட்சி கவிழ்ப்பு வரை” : கொரோனா காலவரிசையும் மோடி அரசின் நடவடிக்கைகளும்!