Tamilnadu
நிஜாமுதீன் மாநாடு எதிரொலி : தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 3.6 லட்சம் பேரை கண்காணிக்க உத்தரவு! #Corona
தேசிய ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்பு, டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் தப்லிகி ஜமாத் அமைப்பின் மாநாடு கடந்த மார்ச் 13 முதல் 15ம் தேதி வரை நடைபெற்றது. இதில், இந்தியாவின் கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டோரும், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றனர்.
அந்த மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டைச் சேர்ந்த 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், 200க்கும் மேலானோர் டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து, மத வழிபாடு மாநாட்டை நடத்திய தப்லிகி ஜமாத்தின் மார்காஸ் நிஜாமுதீன் மீது டெல்லி அரசு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
முன்னதாக, மாநாட்டின் பங்கேற்ற 10 பேர் உயிரிழந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவர்.
அதுபோல, தமிழகத்தின் கோவை மேட்டுப்பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சி மற்றும் அன்னூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 82 பேரும் டெல்லி மாநாட்டின் பங்கேற்றது தெரியவந்துள்ளது. அதனையடுத்து, அவர்களை அடையாளம் கண்ட மாவட்ட நிர்வாகத்தினர், அவர்களை தனிமைப்படுத்தியதோடு 82 பேரின் சளி மற்றும் ரத்த மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக ஆட்சியர் ராசாமணி கூறியுள்ளார்.
அதுபோக, சென்னை, ஈரோடு, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 1,08,677 வீடுகளில் வசித்து வரும் 3,96,000 பேரிடம் கொரோனா தொற்று குறித்த அறிகுறிகள் இருக்கிறதா என பரிசோதிக்க சுமார் இரண்டாயிரத்து 271 பணியாளர்களை சுகாதாரத்துறை பணியமர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் தங்கியிருந்த இருப்பிடத்தைச் சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் தொலைவுக்கு கொரொனா கட்டுப்படுத்தல் திட்டப்பகுதியாக அறிவித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!