Tamilnadu
“எனக்கு வைரஸ் அறிகுறி இருக்கு; நீண்ட விடுப்பு வேண்டும்” - 8ம் வகுப்பு மாணவனின் கொரோனா லீவ் லெட்டர்!
கோவிட்-19 எனும் ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான நாடுகளில் பரவி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை ஐயாயிரத்துக்கும் மேலானோர் இந்த வைரஸுக்கு பலியாகினர். இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ள இந்த வைரஸால் இருவர் உயிரிழந்தது மக்களிடையே மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாக இதுவரை 105 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஓமனில் இருந்து வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த நபர் குணமடைந்துவிட்டதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸ், பறவைக் காய்ச்சல் என பல நோய்கள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக எல்லையில் உள்ள மக்கள் மிகவும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் LKG, UKG படிக்கும் குழந்தைகளுக்கும், தமிழக-கேரள எல்லையில் உள்ள பகுதிகளில் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு பின்னர் திரும்பப்பெறப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பவதற்கு அச்சம் கொள்கின்றனர். இந்நிலையில், சென்னை முகலிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் விடுமுறை கடிதம் ஒன்று எழுதியுள்ளான்.
அதில், “கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனக்கு சளி, காய்ச்சல் உள்ளதாக தெரிகிறது. மற்ற மாணவர்களின் நலன் கருதி நான் நீண்ட நாட்களுக்கு விடுப்பு (மெடிக்கல் லீவ்) எடுத்துக் கொள்கிறேன். ஏனெனில், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என கல்வித்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது. ஆகையால் என்னுடைய விடுப்பு நாட்களை வருகை நாளாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அந்த கடிதத்தில் மாணவன் எழுதியுள்ளான்
இந்த கடிதம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. மேலும், குழந்தைகள் நலன் கருதி அரசு உடனடியாக விடுமுறை அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!