Tamilnadu
“ஏன்டா நியுஸா போடுற..?” : பத்திரிகையாளர் மீது கொலைவெறித் தாக்குதல் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அராஜகம்!?
சிவகாசியில் பத்திரிகையாளர் மீது அ.தி.மு.க குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமுதம் ரிப்போட்டர் இதழில் விருதுநகர் மாவட்ட செய்தியாளராகப் பணியாற்றி வருபவர் கார்த்தி. “ராஜேந்திர பாலாஜியை வீழ்த்துவாரா ராஜவர்மன்? விருதுநகர் அ.தி.மு.க.வில் உச்சகட்ட மோதல்” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி இருந்தார்.
நேற்று வெளியான ‘ரிப்போர்ட்டர்’ இதழில் இடம்பெற்ற அந்தக் கட்டுரையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் அரசியல் அரிதாரம் பூசி கோட்டைக்கு எம்.எல்.ஏ.வாக அழைத்து வரப்பட்ட ராஜவர்மன், வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல இன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகச் செயல்படுவது குறித்து விரிவாக எழுதியிருந்தார்.
இந்நிலையில், சிவகாசியில் நேற்று மாலை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் எம்.எல்.ஏ ராஜவர்மனின் ஆட்கள் செய்தியாளர் கார்த்தி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். ‘ஏன்டா நியூஸா போட்ற?” எனக் கேட்டு கொடும் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
கடும் தாக்குதலுக்கு ஆளான செய்தியாளர் கார்த்தி மிகவும் கடுமையான காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கார்த்தி மீது தாக்குதல் நடத்திய அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ-வுக்கு ஆதரவான அ.தி.மு.க குண்டர்களை கைது செய்யவேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வரும் அவலநிலையை கவனத்தில் கொண்டு, முதலமைச்சர் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு பத்திரிகையாளர் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நடைபெற்று ஒருவருடம் ஆகிவிட்ட நிலையில், கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களும், பத்திரிகையாளர் மீதான தாக்குதல் சம்பவங்களும் ஆளும் அ.தி.மு.க ஆட்சியில் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்