Tamilnadu
"சப் இன்ஸ்பெக்டர் டு கூலி வேலை" - எடப்பாடி ஆட்சியில் நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி!
அரசுப் பணிகளில் நேர்மையான அதிகாரிகள் அத்திபூத்தாற் போல் இருப்பது இந்தியாவின் சாபக்கேடு. ஆனால் நேர்மையான அதிகாரிகளையும், லஞ்ச லாவண்யங்களுக்கு துணைபோகும் அதிகாரிகளும், சில சுயநலம் பேணும் அரசியல்வாதிகளும் நேர்மையைக் குலைக்க பல்வேறு இன்னல்களை கொடுப்பதையே வழக்கமாக கொண்டிருப்பர்.
அதில், ஒன்றாகத்தான் உள்ளது இந்த பணியிட மாற்றங்கள், ஊதிய உயர்வு ரத்து, பதவி இறக்கம் போன்ற நடவடிக்கைகள். இருப்பினும், இதுபோன்ற முட்டுக்கட்டைகளுக்கெல்லாம் எவ்வித கவலையும் இல்லாமல் தவறாது நேர்மையைக் காத்து வருகிறார்கள் சில அதிகாரிகள். அவர்களில் பலர் வேலையை இழக்கும் நிலைக்கும் தள்ளப்படுவதுதான் வேதனையே.
அந்தவகையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எஸ்.ஐ. ராஜ்குமார் அதிகாரிகளால் வஞ்சிக்கப்பட்டுள்ளார். காவல்துறையில் சேர்ந்து மக்களின் குறைகளை தீர்த்து பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற லட்சியத்தோடு சீருடைப் பணியாளர் தேர்வெழுதியவருக்கு விரும்பியவாறே 2006ல் சிறைத்துறையில் காவலராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், அவரது நேர்மைக்கும், லட்சியத்துக்கும் ‘செக்’ வைக்கும் வகையில் மேலதிகாரிகள் குடைச்சல் கொடுத்து வந்திருக்கிறார்கள்.
அங்கிருந்தபடியே, உதவி ஆய்வாளர் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்து 2011ம் ஆண்டு முதல் எஸ்.ஐயாக பணியாற்றி வந்தார். முதலில் கன்னியாகுமரி பின்னர் சென்னையின் அடையாறு, அமைந்தகரை, அண்ணாநகர், அம்பத்தூர் என தொடர்ந்து மாற்றப்பட்டார். அசராமல் இருந்த ராஜ்குமாருக்கு ஊதிய உயர்வும் போனது. கடைசியில் சென்னை ஆயுதப்படை பிரிவில் இருந்து தூத்துக்குடி தருவைக்குளத்துக்கு மாற்றப்பட்டார்.
அப்பகுதி மக்களின் நலம் விரும்பியாகவும், பாதுகாப்பு அரணாகவும் திகழ்ந்த ராஜ்குமார், காவல்துறையில் சேர்ந்த 8 ஆண்டுகளில் 9 முறை மாற்றப்பட்டிருக்கிறார். தூத்துக்குடிக்கு மாற்றப்பட்ட பின்னர் அவருக்கு சம்பளம் கிடைக்காமல் போனது. 3 குழந்தைகளுக்கு தந்தையான ராஜ்குமார் இத்தனை இடர்பாடுகளிலும் பெற்ற பரிசு என்னவோ மன அழுத்தமும், பதவி விலகலும்தான்.
தற்போது, போலிஸ் வேலையும் இல்லாமல், அதிலிருந்து வரவேண்டிய சம்பளமும் கிடைக்கப்பெறாமல் அவரது குடும்பம் தவித்து வருகிறது. இதனால், கூலி வேலைக்காவது போவோம் என முடிவெடுத்தவருக்கு போலிஸாக இருந்தவர் எப்படி இந்த வேலையைச் செய்வார் என நினைத்து பலரும் மறுத்திருக்கிறார்கள்.
விரக்தியின் உச்சத்துக்கு சென்றபின்னர், பெட்டிக்கடை வைத்து பிழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ராஜ்குமார். இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது சொந்த ஊரான மாங்குடி மக்கள் நூற்றுக்கணக்கானோர் ராஜ்குமாரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி தருவைக்குளம் மக்களும் இதனையே வலியுறுத்துகின்றனர்.
இப்படி மக்களின் அபிமானம் பெற்ற ஒரு நேர்மையான அதிகாரி எதிர்பார்ப்பது சம்பள உயர்வோ, பதவி உயர்வோ அல்ல. நிம்மதியாக தனது பணியைச் செய்யவிட வேண்டும் என்பது மட்டுமேயாகும். காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமியோ, ராஜ்குமார் போன்ற பணியாளர்களை நேர்மையாக பணியாற்றவிடாமல், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மற்றும் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவும் கபில்குமார் சரத்கர் போன்றோரையே வளர்த்து வருகிறார் என்பது, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையே இழக்க வைக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!