Tamilnadu
#CAAProtest : “இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமான போராட்டம்” - பா.ரஞ்சித், வெற்றிமாறன் பேச்சு!
இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாஹீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருவது போல, சென்னையின் ஷாஹீன்பாக் என அழைக்கப்படும் வண்ணாரப்பேட்டையிலும் 16 நாட்களாக தொடர்ந்து போரட்டம் நடைபெற்று வருகிறது.
முஸ்லிம் பெண்கள் முன்னின்று நடத்தும் இந்தப் போராட்டத்தின் போது மதச்சார்பின்மையை போற்றும் வகையில் அவ்வப்போது கலை நிகழ்ச்சிகளும், இஸ்லாமியர்களுக்கு திருமணம், இந்துக்களுக்கு திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் திரைப்பிரபலங்களும் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறனும், பா.ரஞ்சித்தும் வந்து போராட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றினர்.
அப்போது பேசிய வெற்றிமாறன், “மோடி அரசு கொண்டுவந்துள்ள சி.ஏ.ஏ, என்.பி.ஆர்., என்.ஆர்.சி போன்ற சட்டங்கள் நாட்டின் சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இது இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரான சட்டம் அல்ல. அசாம் மாநிலங்களில் தடுப்பு காவல் முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் இந்துக்களே அதிகம் உள்ளனர். ஆகவே அனைத்து தரப்பு மக்களும் இந்தச் சட்டங்களை எதிர்த்து போராட வேண்டும்.” எனக் கூறினார்.
அதேபோல, “பா.ஜ.க அரசு பாசிச மனப்பான்மையில் சிறுபான்மையின மக்களை ஒடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. டெல்லியில் நடந்தது திட்டமிட்ட வன்முறை. இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரிவினையை உண்டாக்கப் பார்க்கிறார்கள். அவற்றை நாம் இரும்புக்கரம் கொண்டு தடுத்தாக வேண்டும்.
டெல்லியில் நடத்தியதைப் போன்று தமிழகத்திலும் கலவரத்தை ஏற்படுத்த பா.ஜ.கவினர் முயற்சிக்கிறார்கள். அதனை தமிழக அரசு உடனடியாக தடுத்தாக வேண்டும். இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியர்களுக்குமான போராட்டம்” என இயக்குனர் பா.ரஞ்சித் பேசியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!