Tamilnadu
“கார் பார்க்கிங் பணியில் சேரும் பட்டதாரிகள்”: மோடி - எடப்பாடி ஆட்சியில் அதிகரித்த வேலையில்லா திண்டாட்டம்!
சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சென்னை மாநகர் முழுவதும் ஏராளமான பகுதிகளில் வாகன நிறுத்தும் இடங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அதனை நிர்வகிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுவரை மாநகர் பகுதியில் அமைக்கப்பட்ட பார்க்கிங் பகுதிகளில் ஓய்வு பெற்ற வாகன ஓட்டிகள் பணியில் இருந்தனர். ஆனால் தற்போது நவீன முறையில் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டதால் புதிய பணியாட்களை வேலைக்கு எடுக்க முடிவு செய்துள்ளனர்.
குறிப்பாக, வரும் திங்கட்கிழமை முதல் பார்க்கிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம் மூலம் மாநகர் பகுதியில் கார் பார்க்கிங் செயல்பட உள்ளது. அதனால் காலியாக உள்ள பார்க்கிங் உதவியாளர் பணிகளுக்கு 1,400-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் 70% க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். 50% க்கும் அதிகமானவர்கள் பொறியியலாளர்கள். அவர்கள் இந்தப் பணிக்காக நேற்றைய தினம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர். இந்த சம்பவம் வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோடி அரசின் வேலையில்லாத் திண்டாட்டமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக துப்புரவு பணிக்கு பட்டதாரிக்கள் விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கேரளாவில் ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் பலி!
-
தமிழ்நாட்டு மாணவருக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு : காரணம் என்ன?
-
“கருப்பி.. என் கருப்பி...” : பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நாய்க்கு தீபாவளியன்று நேர்ந்த சோகம்!
-
“தனித்துவத்தை நிலைநாட்டும் தமிழ் மொழி!” : கேரளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
இரயில் நிலையம் To காவல் நிலையம்... 2-வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு போலி எஸ்.ஐ -ஆன பெண் - நடந்தது என்ன?