Tamilnadu

"இரண்டு தேர்வுகளுக்கும் இடைவெளி விட்டு நடத்துக” - TNPSC & TRB க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

வட்டார கல்வி அலுவலர் பணி இடங்களுக்கான தேர்வுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வுகள் வருகிற 14, 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடைபெற உள்ளன.

மேலும், டி.என்.பி.எஸ்.சி முறைகேடு எதிரொலியாக தேர்வு மையங்களை ஆசிரியர் தேர்வு வாரியமே ஒதுக்கீடு செய்ய உள்ளது. அதன்படி தேர்வர்களின் சொந்த மாவட்டத்தை தவிர்த்து பிற மாவட்டங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்படும் எனவும், 3 நாட்களுக்கு முன்புதான் தேர்வு மையம் தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு பணியிடங்களுக்குமான தேர்வுகளையும் ஒரே நேரத்தில் நடத்துவதால் வேலைவாய்ப்புக்கு காத்திருக்கும் இளைஞர்கள் ஏதேனும் ஒன்றை மட்டுமே எழுதும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தேர்வுகளை இடைவெளி கொடுத்து நடத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “TRB & TNPSC மூலமாக வரும் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் வட்டார கல்வி அலுவலர் தேர்வும், சுருக்கெழுத்தர் தேர்வும் நடைபெறுகிறது. இதனால் இளைஞர்கள் இரு தேர்வில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்யவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இரண்டு தேர்வுக்கும் இரண்டு வார இடைவெளி கொடுத்து நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Also Read: "TNPSCScam : ஆளுங்கட்சி சார்பான ஆட்களை காப்பாற்றத்தான் இத்தனை தில்லுமுல்லு”- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!