Tamilnadu
கோவையில் வீதிவீதியாக வரையப்படும் 'NO CAA' சுவர் எழுத்துகள் : எதிர்ப்பை காத்திரமாக முன்னெடுக்கும் தமிழகம்!
மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பள்ளி, கல்லூரி என தொடங்கிய போராட்டம் தெருக்களில் கோலம் போட்டு எதிர்ப்புகளை பதிவு செய்யும் நிலைக்குச் சென்றுள்ளது.
இந்திய மக்களின் கடும் எதிர்ப்பையும் கண்டுக்கொள்ளாத மோடி அரசு இத்திட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்துவதில் தீவிரமாகியுள்ளது. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் வகையில் வீடுகளின் சுவற்றில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாசங்களை வரைந்து தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்துவருகின்றனர்.
கோவை மாவட்டம் கரும்புக்கடை, உக்கடம், சாரமேடு பகுதிகளில் அப்பகுதிகளைச் சேர்ந்த ஜனநாயக அமைப்பினர் வீடுகளின் உரிமையாளர்களிடம் அச்சு வரைபடம் என அழைக்கப்படக்கூடிய ஸ்கிரீன் பிரின்டிங் மூலம் , NO CAA, NO NRC, NO NPR எனப் பதிவிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளில் சுவர் எழுத்துகள் மூலம் குடியுரிமை சட்டத்திற்கான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இளைஞர்களின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பெரிதும் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், இதுபோல தமிழகம் முழுவதும் வரைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!