Tamilnadu
“ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை” - பா.ஜ.க அரசின் உத்தரவால் மக்கள் அதிர்ச்சி!
ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைக்க சுற்றுச்சூழல் துறை அனுமதியும் பொதுமக்களின் கருத்து கேட்பும் தேவையில்லை என திருத்தப்பட்ட அறிவிக்கையை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களைச் சிதைக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு எதிரான போராட்டங்கள் இப்போதும் டெல்டா பகுதிகளில் அவ்வப்போது நடந்து வருகின்றன.
இந்நிலையில், தற்போது மக்கள் விரோத மத்திய பா.ஜ.க அரசின் புதிய உத்தரவு ஒன்றால் டெல்டா பகுதி மக்கள் மட்டுமன்றி தமிழக மக்கள் அனைவருமே அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவையில்லை எனவும், பொதுமக்கள் மத்தியில் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தவேண்டிய அவசியம் இல்லை என்றும் மத்திய அரசு, திருத்தப்பட்ட அறிவிக்கையை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணையால் டெல்டா விவசாயிகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மக்களுக்கும், சூழலுக்கும் ஆபத்து விளைவிக்கக்கூடியது எனப் பெரும்பான்மை மக்களால் கருதப்படும் ஒரு திட்டத்தை சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இன்றியும் மக்களின் கருத்துப் பங்கேற்பு இன்றியும் கொண்டுவர பா.ஜ.க அரசு துடிப்பது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மக்கள் விரோத பா.ஜ.க அரசின் இந்த உத்தரவால் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மீண்டும் மிகப்பெரும் போராட்டங்கள் வெடிக்கும் சூழலை அரசே ஏற்படுத்தியிருப்பதாகவும் டெல்டா பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!