Tamilnadu
விதிகளை மீறி சென்னை மாநகருக்குள் செயல்படும் சுங்கச்சாவடி : மோசடியாக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு!
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மாத்தூர் பகுதியில் எண்ணூர் துறைமுக சாலையில், சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ் செயல்பட்டு வந்த இந்த சுங்கச்சாவடி 2018ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க ரித்தி சித்தி என்கிற நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த சுங்கச்சாவடியில், கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு 35 ரூபாயும், உள்ளூர் வாகனங்களுக்கு 15 ரூபாயும், கனரக வாகனங்களுக்கு 180 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஃபாஸ்டேக் கட்டாயம் என்கிற உத்தரவு நடைமுறைக்கு வந்ததாகக் கூறி உள்ளூர் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் ஒட்டச்சொல்லி கட்டாயப்படுத்தி, ஃபாஸ்டேக் ஒட்டாத வாகனங்களுக்கு விதிகளை மீறி அபராத கட்டணம் வசூலிக்கின்றனர்.
கட்டணம் செலுத்த மறுக்கும் வாகன ஓட்டிகளை குண்டர்களை வைத்து தாக்குவதாகவும் வாகன ஒட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், சாலை குண்டும் குழியுமாக மோசமாக இருப்பதாகக் கூறியும், சாலையைச் சரிசெய்ய சுங்கச்சாவடி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், பராமரிப்பு இல்லாத இந்தச் சாலைக்கு கிலோமீட்டர் கணக்கீடு எதுவும் இன்றி நேரடியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஒரு சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோ மீட்டருக்கு உட்பட்டோ, மாநகராட்சி எல்லைக்குள்ளோ சுங்கச்சாவடிகள் அமைக்கப்படக்கூடாது என்ற விதி உள்ளது. இந்நிலையில், விதிகளை மீறி சென்னை மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட பகுதியில் இந்தச் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த சுங்கச்சாவடிக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்பதே உள்ளூர் வாகன ஓட்டிகளின் வேண்டுகோளாக உள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!