Tamilnadu
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்த சென்னை காவல்துறை!
சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.
அதில், டிசம்பர் 31ந் தேதி க்ளப், பப், நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட வேண்டும்
தற்காலிக மேடைகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யவேண்டும். புத்தாண்டு நிகழ்ச்சி மேடைகள் அமைக்க பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றின் தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
நீச்சல் குளத்தின் மீதோ அதற்கு அருகிலேயோ மேடைகள் அமைக்கக் கூடாது என நட்சத்திர விடுதிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், பொதுவெளியில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்.
அடையாள அட்டைகளுடன் அனுமதிக்கப்பட்ட அறைகளில் மட்டுமே மதுபானங்களை பரிமாற வேண்டும், பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு பெண் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், புத்தாண்டு தினத்தன்று பைக் ரேசில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்காக சென்னையில் 25 இடங்களில் வாகன தணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !