Tamilnadu
”எனக்கே தெரியாமல் என்னை பா.ஜ.கவில் சேர்த்துவிட்டனர்” - பதறியடித்து அறிக்கை வெளியிட்ட முன்னாள் நீதிபதி!
சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் மத்திய அமைச்சர் ரவிசங்கர் முன்னிலையில் தமிழக பா.ஜ.கவில் தன்னை உறுப்பினராக்கிக் கொண்டதாக அண்மையில் செய்திகள் பரவின. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தற்போது அவர் விளக்கக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள விளக்க கடிதத்தில், “சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜூலை 6-ஆம் தேதி நடந்த பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் பங்கேற்க வரும் மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்தை சந்தித்து சட்டம் சார்ந்த சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசுவதற்காக மட்டுமே சென்றேன்.
அப்போது அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால், தனிப்பட்ட சந்திப்புக்காக எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என்றும், அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் வரும் வரை மேடையில் காத்திருக்க சொன்னதால், மேடையில் காத்திருந்தேன்.
மத்திய அமைச்சர் கால தாமதாக வந்ததாலும், நேரடியாக நிகழ்ச்சி தொடங்கிவிட்டதாலும், மேடையிலேயே காத்திருந்தேன். அப்போது அமைச்சரை சந்திக்க காத்திருந்த என்னை உறுப்பினராக சேர்த்து விட்டதாக கூறி தமிழக பா.ஜ.க அடையாள அட்டை கொடுத்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பா.ஜ.கவில் சேரும் எவ்வித எண்ணமும் இல்லை என்பதால், தனது உறுப்பினர் சேர்க்கையை நீக்க வேண்டுமென தமிழக பா.ஜ.கவிடம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தான் பா.ஜ.க-வில் சேரவில்லை என்பதை தெளிவுபடுத்துவதாக எம்.ஜெயச்சந்திரன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !