Tamilnadu

பொறியியல் படித்தவர்களுக்கு ஆசிரியர் வேலை? - கேள்விக்குறியாகும் கணக்கு பட்டதாரிகள் நிலை!

குறிப்பிட்ட சில பாடப் பிரிவுகளில் பி.இ., படிக்கும் மாணவர்கள், பி.எட்., படிப்பதற்கு தமிழக அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அனுமதி வழங்கி இருந்தாலும், அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு அனுமதிப்பது குறித்து தற்போது தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையில் பி.இ., பட்டதாரிகள் பி.எட்., முடித்தால், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையான ஆசிரியர் பணியில் சேரத் தகுதி பெறுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையால் தற்போது பி.எட் படித்த 3 லட்சம் பேரில் 70,000 கணக்கு படித்தவர்களுக்கு ஆசிரியர் வேலை கிடைப்பது கேள்விகுறியாகியுள்ளது.

Also Read: “பி.இ பட்டதாரிகள் TET தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம்” - ஆணை பிறப்பித்த தமிழக அரசு!

பொறியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்கிட தமிழக அரசு வேறு வகையில் திட்டங்கள் வகுக்காமல் ஆசிரியர் தேர்வில் அனுமதித்தால் தற்போது பி.எட் படித்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்காமல் போய்விடும் என்கின்றனர் ஜாக்டோ ஜியோ அமைப்பினர்.