Tamilnadu
சிட்டிசன் பட அத்திப்பட்டியாக மாறிய கள்ளக்குறிச்சி கூடலூர் கிராமம் : உயிரைப் பணயம் வைக்கும் மக்கள்
புதிதாகப் பிரிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடலூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன ர். இந்த கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற டவுன் பகுதிக்கு செல்ல ஒரு ஆற்றுப்பாதை மட்டுமே உள்ளது.
கல்வராயன் மலையில் இருந்து சிறுகளூர், மான் கொம்பு, எட்டியார் என பல நீர்விழ்ச்சிகளில் இருந்து வரும் தண்ணீர் இந்த ஆறு வழியே செல்கிறது.
அதனால் மழைக்காலங்களிலோ அல்லது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோட தொடங்கினால் அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த சிரமங்களைச் சந்தித்தே ஆற்றைக் கடக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் கழுத்து அளவு தண்ணீர் ஒடுகிறது. இதனால் தினமும் வேலைக்குச் சொல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமங்களை அடைந்தே ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “அஜித் படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தை போல தன் எங்கள் கிராம கள்ளக்குறிச்சியிலிருந்து தற்போது தனித்தீவாக உள்ளது.
எங்க கிராமத்திற்கென அரசு பள்ளி, துணை ஆரம்ப சுகாதார நிலையம் என எதுவும் இல்லை. அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வெளியூரில் கூலி வேலைக்குச் செல்வோர், தினமும் இந்த ஆற்றை கடந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், பிரசவ காலத்தில் இருக்கும் பெண்கள், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களை கூட அவசர சிகிச்சைக்காக இந்த ஆற்றை கடந்து தான் இரவு நேரங்கள் ஆனாலும் அழைத்து செல்ல வேண்டியுள்ளது.
ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் செல்லும் போது டிராக்டர்கள் மூலமாக கரையை கடந்து செல்கிறோம். பாலம் வேண்டும் என பல்வேறு முறை மனு அளித்தும் இந்த அ.தி.மு.க அரசு பாலம் கட்டித்தரவில்லை. இந்த முறையாவது உடனடியாக அரசு எங்கள் கோரிக்கைக்குச் செவி சாய்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே செல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!