Tamilnadu
''வச்சு செய்ய போகுது'' : நாளை காலை வரை விடிய விடிய மழை பெய்யும் - தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நாளை காலை வரை விடிய விடிய மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலை வரை விடிய விடிய மழை பெய்யும்.
நெல்லை, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும். தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!