Tamilnadu
''டிசம்பர் 1, 2ல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு'' - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ''தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அநேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளது.
ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை, அரியலூர், திருச்சி கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது'' எனத் தெரிவித்தார்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் கீழணை ஆகிய பகுதிகளில் 12 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.
சூறைக் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடல் ஆகிய பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் நாளை தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடல் மற்றும் மாலத்தீவு ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!