Tamilnadu
தமிழகத்தில் தொடர் கனமழை ; 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாகவும், இலங்கையை ஒட்டிய வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாகவும் 30, 1, 2ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்பே தெரிவித்திருந்தது.
இதனையடுத்து தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையும் தற்போது தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. இதன் அறிகுறியாக குமரிக் கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவாகி, தமிழக கடலோரப் பகுதிக்கு நகர்ந்து வந்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.
மேலும், மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் அதாவது திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று இரவு பரவலான மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கியது. அதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !