Tamilnadu
‘தேனிலவுக்குச் சென்ற சென்னை இளைஞருக்கு நடந்த கதி’- நெஞ்சை உருக்கும் சம்பவம்!
சென்னை அமைந்தக்கரையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கும் பிரீத்தி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தேனிலவுக்காக இமாச்சலப் பிரதேசத்திற்கு இருவரும் சென்றுள்ளனர். அங்குள்ள சுற்றுலாத் தலங்களைச் சுற்றி பார்த்துள்ளனர்.
அப்போது அருகில் உள்ள குலு என்ற பகுதியில் பாடாகிளைடர் சாகசத்தில் ஈடுபட்டார். அப்போது முதலில் சென்ற பிரீத்தி பாராகிளைடரில் பறந்து பத்திரமாக தரை இறங்கினார். அவரை அடுத்து சென்ற அரவிந்த் வானத்தில் பறந்துக்கொண்டிருந்தார். அப்போது சிறிது நேரத்திலேயே அரவிந்த் கட்டப்பட்டிருந்த பாதுகாப்பு பெல்ட் கவிழ்ந்து விழுந்துள்ளது.
இதனால் நிலையில்லாமல் பல அடி உயரத்தில் இருந்து கீழே பள்ளத்தில் விழுந்து அரவிந்த் உயிரிழந்தார். அப்போது அவர் விழுந்த அதிர்ச்சியில் பாராகிளைடரை கீழே இறக்க முயன்ற பாராகிளைடர் மாஸ்டருக்கும் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது கணவர் வானத்தில் பறந்ததை ஆர்வத்துடன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த பீரித்தி, அரவிந்த் விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். பின்னர் இதுகுறித்து பட்லிகுஹால் போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் பாதுகாப்பு போலிஸார் மூலம் அரவீந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அரவிந்தின் உடலை ஹிமாச்சலப்பிரதேசத்தில் இருந்து டெல்லி கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவரின் உடலைப் பெற்றுக்கொள்ள அரவீத் குடும்பத்தினர் டெல்லிச் சென்றுள்ளனர். மேலும் இதுதொடர்பாக பாராகிளைடர் நிர்வாகத்தின் மீது பிரீத்தி புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் பாதுகாப்பு பெல்ட்டை சரியாக அணியாததே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்ததாகக்கூறி 3 பிரிவுகளின்கீழ் பாராகிளைடர் நிர்வாகத்தினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருமணமாகி ஒருவாரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது உறவினர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு