Tamilnadu

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.

குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 6 செ.மீ மழையும், திருச்செந்தூரில் 5 செ.மீ மழையும், ஆலங்குடியில் 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 32°செல்சியஸும் குறைந்தபட்சமாக 25°செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதியில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.