Tamilnadu
“உள்ளாட்சித் தேர்தலை இந்த முறையில் நடத்தினால் முறைகேடுகளுக்கு வாய்ப்பு அதிகம்” - ஆர்.எஸ்.பாரதி மனு!
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமியை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார் தி.மு.க அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி.
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான அனைத்து உபகரணங்கள் வாக்குச்சாவடியில் வைக்கப்படும் வாக்குப் பெட்டிகள் உள்ளிட்டவற்றை எந்த பற்றாக்குறை இல்லாமல் நிறைவேற்ற வேண்டும், மாவட்டங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தேர்தல் ஆணையரிடம், மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “உள்ளாட்சித் தேர்தலை நடத்த தொடர்ந்து வலியுறுத்தி வருவது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான். நடைபெறக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் எந்தவித பாகுபாடுமின்றி நடுநிலையாக நடக்க வலியுறுத்தியுள்ளோம்.
உள்ளாட்சித் தேர்தலை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துகள் என தனித்தனியாக நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு பேரூராட்சிகளுக்கு தேர்தல் என்றால் அதிகமான முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, இவ்வாறு நடத்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், கிராம பஞ்சாயத்துகளில் உள்ளவர்கள் வாக்களிக்க வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகியோருக்கான வாக்குச் சீட்டுகளை செலுத்த தனித்தனிப் பெட்டிகள் வைத்தால் முறைகேடுகளை பெருமளவில் தவிர்க்கலாம்.
உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், உள்ளிட்டவை மற்றும் வாக்காளர் இறுதிப் பட்டியல் குறித்தும், வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று காவல்துறையின் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமரா பொருத்த படுவது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்